மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

தொடர் கதையாகும் பெட்ரோல் விலை உயர்வு!

தொடர் கதையாகும் பெட்ரோல் விலை உயர்வு!

கடந்த இரண்டு மாதங்களுக்குள் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.30 வரையில் உயர்ந்துள்ளது. தொடர் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

2016ஆம் ஆண்டின் ஜூன் மாதம் முதலே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட போது விலைகள் குறைக்கப்பட்டாலும், நாளடைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. 2017 டிசம்பர் மாதம் 1ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.67.71 ஆக இருந்தது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விலை உயர்த்தப்பட்டு 2018 ஜனவரி 1ஆம் தேதி பெட்ரோல் விலை ரூ.71.78 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடைசியாக ஜனவரி 10ஆம் தேதி (இன்று) பெட்ரோல் விலை ரூ.73.21 ஆக உள்ளது. அதாவது டிசம்பர் 1 முதல் ஜனவரி 10 வரையிலான 40 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.50 உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் (ஜனவரி 10) பெட்ரோல் விலை டெல்லியில் ரூ.70.62 ஆகவும், மும்பையில் ரூ.78.51 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.73.36 ஆகவும், பெங்களூருவில் ரூ.71.72 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.74.78 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.69.53 ஆகவும் உள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.73.21 ஆக இருக்கிறது. சென்னையில் டீசல் விலை ரூ.64.09 ஆகவும், மானிய சமையல் சிலிண்டர் விலை ரூ.483.71 ஆகவும், மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.750.50 ஆகவும், மண்ணெண்ணெய் விலை ரூ.13.60 ஆகவும் உள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 10 ஜன 2018