மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

டிஜிட்டல் திண்ணை: கேட்ட பணத்தை கொடு!

டிஜிட்டல் திண்ணை: கேட்ட பணத்தை கொடு!

சிறையில் இருந்து வந்த உத்தரவு!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“சில தினங்களுக்கு முன்பு சத்தமில்லாமல் பெங்களூருவுக்குப் பறந்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் இளவரசியின் மகன் விவேக். பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றிருக்கிறார். அப்போது விவேக்கிடம் சசிகலா நிறைய விஷயங்களை மனம்விட்டுப் பேசியதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். சிறைக்குள் என்ன நடந்தது என விசாரித்தோம்.

‘சசிகலா எப்படி மனம் விட்டுப் பேசி இருக்க முடியும்? ஜனவரி முடியும் வரை சசிகலா மௌன விரதம் இருக்கிறார்... யாரிடமும் பேச மாட்டார் என்றுதானே தினகரன் சொல்லி இருந்தார். அப்புறம் எப்படி விவேக்கிடம் மட்டும் பேசினார் சசிகலா?’ என்று நாம் கேட்டோம். பதிலைச் சொன்னார்கள் விவேக்கிற்கு நெருக்கமானவர்கள்.

‘தினகரன் சிறைக்குச் சென்றபோது அவர் மீது இருந்த கோபத்தில் சசிகலா ஒருவார்த்தைகூடப் பேசவே இல்லை என்பதுதான் நிஜம் ( மௌன விரதம் இல்லை என்பதை அப்போதே நாம் டிஜிட்டல் திண்ணையில் எழுதி இருக்கிறோம்). தினகரன் மட்டும் சசிகலாவிடம் பேசிக்கொண்டே இருந்தார். பேசியதில் அதிகமாக விவேக் பற்றிய புகார்களைத்தான் சசிகலாவிடம் சொல்லிவிட்டு வந்தார்.

இப்போது விவேக் சிறைக்குச் சென்றபோது, அது சம்பந்தமாக சசிகலா பேசினாராம். ‘நமக்குள்ள ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்க வேண்டாம் தம்பி. அவரு என்னமோ பண்ணிட்டுப் போகட்டும். எனக்கும்கூட அவரு செய்யுறது பிடிக்கலை. ஆனால், இப்போ நாம அடிச்சுகிட்டா, அது எதிராளிகளுக்குக் கொண்டாட்டமாகிடும். அதனால அவரு என்னமோ பண்ணிட்டுப் போகட்டும். நம்ம டிவியில எப்பவும் போல அவரைப் பத்தி செய்தி போடுங்க. அவரு கேட்டா பணம் கொடுத்தனுப்பு. அவரு சொல்றதைக் கேட்டு நடந்துக்கோ...’ என்று சசிகலா சொன்னாராம். அதற்கு விவேக், ‘என்னை அவருக்குப் போட்டியாக நினைக்க ஆரம்பிச்சுட்டாரு. நான் எது சொன்னாலும் அதுக்கு ஏட்டிக்குப் போட்டியாகத்தான் அவரு பண்ணிட்டு இருக்காரு. அவரு பணம் கேட்டு நான் கொடுக்க மாட்டேன்னு எப்பவும் சொன்னதே இல்லை. அவரு என்கிட்ட இதுவரைக்கும் கேட்டதே கிடையாது. சொல்லப்போனால், அவரு என்கிட்ட பேசுறதே கிடையாது. அவராலதான் நமக்கு இவ்வளவு கெட்ட பெயரும் வந்திருக்கு.

அம்மா ஹாஸ்பிட்டல்ல இருந்த வீடியோவை வெளியிட்டாகணும்னு நீங்க சொல்லியிருந்தால், அதை நம்ம டிவியிலேயே முதல்ல வெளியிட்டிருக்கலாமே... இவ்வளவு நாளா நீங்க நினைச்சிருந்தா அதை வெளியிட்டிருக்க முடியாதா? அவரோட சுயநலத்துக்காகத்தானே அந்த வீடியோவை யூஸ் பண்ணிகிட்டாரு. இதையெல்லாம் நாம கேட்டால் நம்மை தப்பானவங்கன்னு சொல்லுவாரு’ என்று சொன்னாராம். விவேக்கை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார் சசிகலா” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

“விவேக் என்ன திட்டத்தில் இருக்கிறாராம் ?” என்ற கேள்வியை ஃபேஸ்புக் போட்டது. பதிலை அடுத்த மெசேஜ் ஆகப் போட்டது வாட்ஸ் அப்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 10 ஜன 2018