மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

குடியரசு தினத்தை குறிவைக்கும் படங்கள்!

குடியரசு தினத்தை குறிவைக்கும் படங்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட முன்வந்து தியேட்டர்கள் கிடைக்காததால் குடியரசு தின விடுமுறையை பல படங்கள் குறிவைக்கின்றன.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, வருகிற வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) 9 படங்கள் வரை வெளியாக இருந்தன. ஆனால், சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’ ஆகிய மூன்று படங்களும் அனைத்து தியேட்டர்களையும் கைப்பற்றி விட்டதால், மற்ற படங்கள் தங்கள் வெளியீட்டை தள்ளிப்போட்டன.

குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் அதை தொடர்ந்து சனி, ஞாயிறு என மூன்று நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. அன்றைய தினம் படத்தை வெளியிட பல தயாரிப்பாளர்கள் போட்டி போடுகின்றனர். ஜெயம் ரவி நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள ‘டிக் டிக் டிக்’, விஷால் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள ‘இரும்புத்திரை’, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள ‘நிமிர்’, அனுஷ்கா நடிப்பில் அசோக் இயக்கியுள்ள ‘பாகமதி’ ஆகிய 4 படங்கள் 26ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே கூறப்பட்டது.

இந்நிலையில், பொங்கலுக்கு தியேட்டர் கிடைக்காத சுந்தர்.சி.யின் ‘கலகலப்பு 2’ படத்தை ஜனவரி 26ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். இதுதவிர, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தையும் ஜனவரி 26ஆம் தேதி வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவை தவிர, பாலிவுட்டில் தீபிகா படுகோன் நடித்துள்ள ‘பத்மாவத்’ மற்றும் அக்‌ஷய் குமார் நடித்துள்ள ‘பேட் மேன்’ ஆகிய படங்களும் தமிழில் வெளியாகின்றன.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 10 ஜன 2018