மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

வெற்றிபெற்ற இந்திய வீரர்கள்!

வெற்றிபெற்ற இந்திய வீரர்கள்!

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ராம்குமார் ராமநாதன் மற்றும் யூகி பாம்ரி வெற்றி பெற்றனர்.

ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின. அதில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் அமெரிக்க வீரர் பிராட்லி கிளான் உடன் மோதினார். முதல் செட் முதலே இருவரும் சரிசமமாக விளையாடிவந்தனர். முதல் செட்டினை 7-6 என்ற புள்ளிக் கணக்கில் பிராட்லி கைப்பற்றினார். பின்னர் அதிரடியாக விளையாடிய ராம்குமார் இரண்டாவது செட்டினை 7-6 எனக் கைப்பற்றினார். வெற்றியைத் தீர்மானிக்கும் 3ஆவது செட் மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்றது. அதில் ராம்குமார் 6-2 என எளிதில் வெற்றிபெற்று அடுத்த சுற்றிற்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்திய வீரர் யூகி பாம்ரி கனடாவை சேர்ந்த ப்ரேடன் உடன் மோதினார். முதல் செட்டில் 1-6 என மோசமான தோல்வியை சந்தித்த யூகி, அடுத்த இரண்டு செட்களையும் 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றிற்குள் நுழைந்தார். நாளை (ஜனவரி 11) இருவரும் மற்றொரு தகுதிச் சுற்றில் விளையாட உள்ளனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 10 ஜன 2018