மாநிலத்தை மாற்றிய செய்தித் துறை!


மாநிலக் காவல் துறை உயரதிகாரிகள் மாநாடு நடைபெற்ற மாநிலத்தைத் தமிழக செய்தித் துறை மாற்றிக் குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலக் காவல் துறை உயரதிகாரிகள் மாநாடு மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் உள்ள தேகன்பூரில் ஜனவரி 6 முதல் 8 வரை நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, இணையக் குற்றங்களைத் தடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனப் பேசியிருந்தார்.
முன்னதாக, நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையமும், ஐந்தாவது சிறந்த காவல் நிலையமாக அண்ணா நகர் காவல் நிலையமும் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதற்கான விருதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநாட்டில் வழங்கினார்.
விருது பெற்ற ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி மற்றும் அண்ணா நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று (ஜனவரி 9) சந்தித்து வாழ்த்து பெற்றனர்.