மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

எச்.ராஜா ஒரு தமிழ் தொண்டர்: அப்டேட் குமாரு

எச்.ராஜா ஒரு தமிழ் தொண்டர்: அப்டேட் குமாரு

ஆளுக்கு ஒரு பக்கம் விருது கொடுக்குறீங்களே, விளம்பரத்துறையில தவிர்க்கமுடியாத சக்தியா உருவெடுத்துருக்குற எச்.ராஜாவுக்கு ஒரு விருதை பார்சல் பண்ணுங்களேன்ப்பா. தமிழ்நாட்டோட தவிர்க்கமுடியாத சக்தியா அண்ணன் உருவெடுத்துருக்காரு. இன்னைக்கு தேதிக்கு யார் பேமஸ் ஆகனும்னாலும் அவர் வாயில விழுந்தா போதும்; ஓவர் நைட்ல ஒபாமா ஆயிடலாம். இப்ப ஆண்டாள் மேட்டருக்கும் அதை தான் சொல்றாங்க. தீபாவளிக்கு வெளியான மெர்சல் படத்தை வெற்றிப்படமா அண்ணன் மாத்துனமாதிரி பொங்கலுக்கு எந்த படமும் சிக்கலையாம். அதான் திரைத்துறையில இருந்து இலக்கியம் பக்கம் சிஃப்ட் ஆயிட்டாரு. புக் ஃபேர் ஆரம்பிச்சுருச்சுல்ல, அதான் இலக்கிய சர்ச்சையை பத்த வச்சுருக்காருன்னு நெட்டிசன்ஸ் ஸ்டேட்டஸ் தட்டி விடுறாங்க. இவர் திட்டுன திட்டுக்கு இந்த தடவை வைரமுத்து புக் எத்தனை கோடியை தாண்டி வசூல் ஆகப்போகுதுன்னு தெரியலையே. இப்ப வர்ற வசூலை மொத்தமா ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு கொடுக்கப்போறதா வைரமுத்து வேற சொல்லிருக்காரு. தமிழ் மேல எவ்வளவு பாசம் இருந்தா எச்.ராஜா இப்படி ஒரு பணியை முன்னெடுத்துருப்பாரு. வாழ்க அவர் தமிழ் தொண்டு...

@Kozhiyaar

அப்பா குடும்ப முடிவுகளில் உங்கள் கருத்தை கேட்க ஆரம்பிக்கிறார் என்றால், நீங்கள் வாழ்வின் அடுத்த நிலையை அடைந்து விட்டீர்கள் என்று உணர்ந்து கொள்ளுங்கள்!!

@CreativeTwitz

பிஜேபியின் சூப்பர் ஸ்டார் மோடி~எச் ராஜா

///இங்க தமிழ் நாட்டுல அவரு என்னவோ பவர்ஸ்டார் தான்

@kanavukathalan

முள்ளை முள்ளால் எடுக்க

முடியும் என்பதைப்போல

வீட்டில்தொலைந்த போன

செல்லையும் இன்னொரு

செல்லால் எடுக்க முடியும்

@Kartiktweaks

Bus :பாஸ் டிரைவர் ஸ்ட்ரைக்..அடுத்து யார் என்ன ஓட்டபோறா..?!!

TN Goverment :ஹ்ம்ம்..பேசாம டிப்போல போய் நில்லு டெம்ரவரி லாரி டிரைவர் ஒருத்தன் வருவான்..உன்னைய ஓட்டிட்டு போய் மரமோ வீடோ பாத்து சொருகுவான் போய் சேருபோ..

@g4gunaa

ஆனா நாமதான்யா கெடந்து உருண்டுட்டுருக்கோம்! அந்தாளு அசால்ட்டா "முல்லைக்கு தேர் குடுத்தான் பாரி.. ஆண்டாளை தப்பா பேசுனதுக்கு சாரி"ன்னுட்டு ஞானபீடத்துக்கான வேலையை பாக்க போயிட்டாப்ல

@Boopathy Murugesh

மக்கள் ஓலா கேப், ஓசி பைக், ட்ரெயின், ஷேர் ஆட்டோன்னு அவங்கவங்க வசதிக்கு ஏத்த மாதிரி ஓடிட்டு தான் இருக்காங்க..

அதான ஒரு வருசமா அரசாங்கமே இல்லாம சமாளிச்சுட்டுருக்கோம், அரசு பேருந்து இல்லாமா சமாளிக்க மாட்டோமா?

@SD Prabhakar

சாதாரணமாக புத்தகக் காட்சி வரும்போதுதான் ஓசி விளம்பரத்துக்காக சில எழுத்தாளர்கள் இதுமாதிரி குட்டையை குழப்புவாங்க. யாராவது செக் பண்ணுங்க அவங்க போதைக்கு நாம ஊறுகாயாகப்போறோம்.

எல்லோரும் சும்மா இருக்கும்போது கரெக்டா எச்.ராஜா மட்டும் குதிக்கிறார்னா மெர்சல் ப்ரமோஷன் நியாபகம் வருது நமக்கு.

@senthilcp

தலைவரே!கவர்மெண்ட் பஸ் ஓடாம இருந்தும் ஜனங்க எப்டி சமாளிச்சாங்க?

ஜூஜூபி மேட்டர் இது,தமிழ்நாட்ல கவர்மெண்ட்டே இயங்காம இருந்தப்பவே சமாளிச்சாங்க,கவர்மெண்ட் பஸ் இயங்கலைன்னா சமாளிக்க மாட்டாங்களா?

@KeethaSj

விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்யும் போதெல்லாம் இதயம் வலித்தது...

'நிரந்தர முகவரி' இல்லையே என....!!!

வாடகை_வீட்டில்_வாழ்பவருக்கு.....

@Thaadikkaran

ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

தமிழ் நாட்டு மக்களுக்குத்தான் கொடுக்கணும் அமைதிக்கான நோபல் பரிசு..!!

@mufthimohamed1

ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

கோபால் பல்பொடி வேணும்னா வழங்குவாங்க வாங்கிட்டு போங்க.

@smhrkalifa

தற்காலிக ஆட்சியாளர்கள் ஆளும்போது,தற்காலிக ஓட்டுனர்களே கிடைப்பார்கள். #தற்காலிக_ஓட்டுநர்

@Kozhiyaar

எங்க வீட்டமமாக்கு என் மேல் ரொம்ப பிரியம்!?

பின்ன இன்னும் பிரஷர் வராத எனக்கு உப்பு, உரப்பு இல்லாம குழம்பு ரசம் கொடுத்து விட்டிருக்காங்கன்னா பாத்துகோங்க!!!

@senthilcp

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு எம்ஆர்பி விலையை விட 1 ரூபாய் கூடுதலாக விற்றால் ரூ.1000 அபராதம்.

அரசாங்கம்"மட்டும்தான் கொள்ளை அடிக்கனுமா?

@காயத்ரி தினேஷ்

பாரத ஸ்டேட் வங்கியிடம் ரூ.750 கோடி கடன் வாங்க முடிவு செய்திருப்பதாக அரசுத்தரப்பில் தகவல்

விஜய்"மல்லய்யாக்கு லோன்"தந்த பேங்கா?

@senthilcp

தலைவரே! கமல் மாதிரியே ஆகனும்னு ஆசைப்படறீங்களா?

இல்லையே?ஏன்?

டிவி க்கள்ல கருத்து விவாதங்கள்ல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கெட்டப்ல ஒவ்வொரு லேபிள்ல வர்றீங்களே?

கருப்பு கருணா

500 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணா மாசம் பூராவும் அன்லிமிட்டா பேசிக்கலாம்ன்னு ஆயிட்ட காலத்துல, எம் எல் ஏங்களுக்கு 7000 ரூபாய் டெலிபோன் படி என்பதெல்லாம்...கொள்ளையோ கொள்ளை..!

SD Prabhakar

முன்பொரு முறை இவங்க காண்டான தருணம்....

கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன் சட்டசபையில்...

டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என குரலெழுப்பியபோது துடித்தெழுந்த சத்தியமூர்த்தி 'கலாசாரம் பண்பாடு ஆகியவற்றைக் காக்க கலைகளைப் பேண தேவதாசி முறை தேவை என்று பேசினார். “தாசி (தேவதாசி) குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பலருக்கு இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதை திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். தாசிகள் கோயில் பணிகளுக்கென்றே படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால், பரதநாட்டியக் கலை ஒழிந்துவிடும். சங்கீதக்கலை அழிந்துவிடும். ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயமாகும்” என்றார்.

அதற்கு பதிலளித்த முத்துலட்சுமி எங்கள் வீட்டு பெண்கள் தேவதாசி முறையால் உடல் சோர்ந்துவிட்டார்கள் அப்படித்தான் ஆண்டவன் கட்டளையை மீறக்கூடாதென்றால் உயர்சாதி பெண்களை தேவதாசி முறைக்கு அனுப்புங்கள் என முத்துலட்சுமி அம்மையார் கூறினார். அவர் சட்டசபையில் கூறிய அந்த ஒற்றை வரிதான் பின்நாளில் தேவதாசி முறை ஒழிப்புக்கான விதை. ஒரு பயலும் குறுக்க வரல.

மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரே ஆரம்பித்ததுதான் இன்று ஆலமரமாய் விரிந்திருக்கும் #அடையார்கேன்சர்இன்ஸ்டியூட்.

-லாக் ஆஃப்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 10 ஜன 2018