மதுசூதனனின் கேள்வியும் அதிமுக விளக்கமும்!


தனது தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தலைமைக்கு மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் நடந்துமுடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவால் டெபாசிட் மட்டுமே பெற முடிந்தது. இந்நிலையில், தனது தோல்விக்கு அமைச்சர்களில் சிலர் காரணம் எனவும் அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் மதுசூதனன் கடிதம் எழுதியதாகத் தகவல் வெளியானது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மதுசூதனன், “ நான் கடிதம் எழுதினேனா இல்லையா என்பது பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறு எழுதியிருந்தாலும் அது கட்சி சார்ந்த ஒன்று. அதிமுக உருவானதில் நானும் பங்காற்றியுள்ளேன். அக்கட்சி மீது அதிருப்தி அடைய மாட்டேன்” என்று பதிலளித்திருந்தார்.