மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

நிலச்சரிவு: 13 பேர் பலி, 300 பேர் சிக்கி தவிப்பு!

நிலச்சரிவு: 13 பேர் பலி, 300 பேர் சிக்கி தவிப்பு!

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 13 பேர் பலியாகி உள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் புயல் காரணமாக பலத்தமழை பெய்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தெற்கு கலிபோர்னியா கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

கலிபோர்னியாவின் கிழக்கு சாந்தா பார்பரா, ரோமரோ கேன்யான், மான்டெசியோ உள்ளிட்ட பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணில் புதைந்தன. தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் மற்றும் அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு குழுவினர் இதுவரை 50 பேரை மீட்டுள்ளதாகவும், மேலும் 300க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி தவிப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை உயிருடன் மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 10 ஜன 2018