அமீர் வெளியிட்ட அருவா சண்ட!


கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள அருவா சண்ட படத்தின் டீசரை வெளிட்டுள்ளார் இயக்குநர் அமீர்.
சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து ஆதிராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அருவா சண்ட’. கபடி விளையாட்டில் மாநில அளவில் பதக்கம் வென்ற ராஜா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்தப் படத்தில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
கபடி விளையாட்டை மையமாகக் கொண்டும் அதே சமயம் ஆணவக் கொலைகளின் பின்புலத்தைப் பேசும் படமாக உருவாகியுள்ள அருவா சண்ட படத்தின் டீசரை இயக்குநர் அமீர் நேற்று (ஜனவரி 9) வெளியிட்டுள்ளார். மேலும் “டீசர் நன்றாக இருக்கிறது, படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்” என்றும் அமீர் பாராட்டியுள்ளார்.