சென்னை மெட்ரோவில் பணப் பரிவர்த்தனை மையம்!


சென்னை விமான நிலைய மெட்ரோ ஸ்டேஷனில் வெளிநாட்டு பணம் பரிவர்த்தனை செய்யும் வசதி விரைவில் தொடங்கவுள்ளது.
சென்னையில் வெளிநாட்டு பணிகள் பயனடையும் வகையில் விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டருக்கு எதிரே பணப் பரிவர்த்தனை மையம் அமைக்கப்படவுள்ளது. "இத்திட்டம் குறித்த ஆய்வுகள் தற்போது நடைபற்று வருகிறது. ஒப்புதல் கிடைத்தவுடன் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் இத்திட்டம் அமல் படுத்தப்படும்" என மெட்ரோ ரயில் நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தின் அருகாமையில் 6 பணப்பரிவர்த்தனை மையங்கள் உட்பட மொத்தம் 7 பணப்பரிவர்த்தனை மையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.