மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

ஹானர் நிறுவனத்தின் டூயல் செல்பி!

ஹானர் நிறுவனத்தின் டூயல் செல்பி!

ஹானர் நிறுவனம் புதிதாக ஹானர் 9 லைட் என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. இம்மாத இறுதியில் இந்த மாடல் விற்பனைக்கு வெளியாகும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் நிறுவனம் குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட மாடல்களை வெளியிட்டுப் பயனர்களை ஈர்த்துவருகிறது. சமீபத்தில் வெளியான ஹானர் 8 மாடலும் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஹானர் 9 லைட் என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

5.65 இஞ்ச் திரையளவு கொண்ட இந்த புதிய மாடல், 13MP + 2MP எனப் பின்புறம் மற்றும் செல்பி கேமரா இரண்டையும் டூயல் கேமரா வசதியுடன் ஹானர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

4GB RAM மற்றும் 32GB இன்டெர்னல் வசதியும் கொண்டுள்ள இந்தப் புதிய மாடல், 3000 mAh பேட்டரி வசதியும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 14,500 என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இம்மாத இறுதியில் இந்த மாடல் வெளியான பின்னரே இதன் வரவேற்பு எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

புதன் 10 ஜன 2018