மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

மதுசூதனன் தோல்விக்கு காரணம் பன்னீர்-பழனிசாமி

மதுசூதனன் தோல்விக்கு காரணம் பன்னீர்-பழனிசாமி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் தோல்வியடைந்ததற்கு பன்னீர் செல்வம் மற்றும் பழனிசாமி ஆகியோர்தான் காரணம் என டிடிவி தினகரன் எம்எல்ஏ விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று ஜனவரி 10 ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ தினகரன் எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” தனக்கு முதல்வர் பதவி இல்லை என்பதற்காகத் தியானம் செய்த பன்னீர் செல்வம் குடும்ப ஆட்சியை எதிர்த்துப் போராடுவதாக கூறுகிறார். என்னால் ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தப்பட்ட பன்னீர்செல்வம், எங்கள் குடும்பத்தால் முதல்வரான அவர் தற்போது குடும்ப ஆட்சியை எதிர்ப்பதாகக் கூறுகிறார். தங்கமணி, ராமானுஜம் ஆகியோரால்தான் ஜெயலலிதா எங்களைக் கட்சியை விட்டு வெளியேற்றினார். யாருக்கோ விசுவாதத்தை காட்டுவதற்காக எங்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்” என்று விமர்சித்தார்.

எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வு குறித்த கேள்விக்கு, “எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு என்பது அவசியமற்ற ஒன்று. நியாயமான உயர்வு என்றாலும் பரவாயில்லை. நூறு சதவிகிதம் உயர்வு என்பது தேவையில்லாதது. ஊர் தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போல் மக்கள் பணத்தை வீண் செய்கின்றனர். இந்த வேலையை எடப்பாடி சிறப்பாகச் செய்வார்” என்று பதிலளித்தார்.

மதுசூதனன் தோல்விக்கு யார் காரணம்

ஆர்.கே.நகரில் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் மதுசூதனன் கட்சி தலைமைக்குக் கடிதம் எழுதியுள்ளது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தினகரன், “மதுசூதனனே மிகப் பெரிய ஏமாற்றுவாதி, அவரது தோல்விக்கு முதல் காரணம் அவர்தான். துரோக மன்னர்கள் எடப்பாடி பழனிசாமி – பன்னீர்செல்வம் ஆகியோர் இரண்டாவது காரணம். எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்தால்தான் இரட்டை இலைக்கு மதிப்பு. ஓட்டுக்கு ரூ. 6 ஆயிரம் கொடுத்ததால்தான் அவர்களுக்கு டெப்பாசிஸ்டாவது கிடைத்தது” என்று பகடி செய்தார்.

பேச்சுமன்னன், டெங்கு கொசு என ஜெயக்குமாரை குறிப்பிட்ட அவர், “ தொகுதிக்குள் ஜெயக்குமார் சென்றால் அவரது உறவினர்களே அடித்து விரட்டிவிடுவார்கள்” என்று தெரிவித்தார். குட்கா ஊழலில் பன்னீர்செல்வம் பழனிசாமி ஆகியோருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தெரிவித்த அவர், “பழனிசாமியும் பன்னீர்செல்வமும் உலக மகாநடிகர்கள். பதவிக்கான தனது மனைவி குழந்தைகளைக்கூட தெரியாது என கூறும் அளவுக்கு பதவி வெறி பிடித்தவர்கள்” என காட்டமாக கூறினார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை முதல்வரே மனம் இறங்கிச் சென்று கேட்க வேண்டும். அவர்களது கோரிக்கை என்பது நியாயமானது. அவர்களை மிரட்டுவது என்பது நியாயமல்ல என்று கூறிய தினகரன், சட்டப்பேரவையில் தான் அரசியல் பேசப்போவதில்லை என்றும் மக்களின் பிரச்னைகள் குறித்துப் பேசப்போவதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்டாலின் பாணியை மாற்ற வேண்டும்

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

புதன் 10 ஜன 2018