பியூட்டி ப்ரியா: உற்சாக உதடுகள் பெற!


உடலில் வைட்டமின் சத்து குறைபாடு ஏற்பட்டால் உதடுகளின் ஓரத்தில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தக் குறைபாட்டைப் போக்க உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துகொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வைட்டமின் இ சத்துகள் நிறைந்த சன்ஸ்கிரீன் லோஷனைத் தடவினாலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறையும்.
கொழுப்புச் சத்து குறையும்போது உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில் வாஸலின் தடவிக்கொள்ளலாம்.
உதடு வெடிப்புகள் குணமடைய:
அதிக குளிரோ, அதிக வெப்பமோ எதுவானாலும் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும், சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளும் ஏற்படும். அவர்கள் பாலேட்டுடன் நெல்லிக்காய்ச் சாறு கலந்து, உதடுகளில் தடவிவந்தால், கருமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.