மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

நாச்சியார் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாச்சியார் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாலாவின் 'நாச்சியார்' பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளதாகப் படக் குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நாச்சியார்'. பாலா தயாரிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்துக்குத் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய ‘ஒன்னவிட்டா யாரும் இல்ல எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து’ பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார்.

முன்னதாக, நாச்சியார் படத்தின் டீஸரை இணையத்தில் சூர்யா வெளியிட்டார். டீஸரின் முடிவில் ஜோதிகா பேசிய வசைச் சொல்லால் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாகப் பல்வேறு இயக்கங்கள் தங்களுடைய கண்டனத்தையும் பதிவு செய்தன. இது தொடர்பாகப் பேசிய ஜோதிகா, "அந்த டீஸரைப் பற்றி இப்போது பேச வேண்டாம். படம் பார்த்தால் அனைத்துமே முடிவுக்கு வந்துவிடும். அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

நாச்சியார் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் தஞ்சாவூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படமாக்கப்பட்டது. 'நாச்சியார்' படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 10 ஜன 2018