மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

குட்கா அதிகாரி மாற்றம்: திமுக வெளிநடப்பு!

குட்கா அதிகாரி மாற்றம்: திமுக வெளிநடப்பு!

குட்கா விவகாரத்தை விசாரித்துவந்த விஜிலென்ஸ் கமிஷனரான ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ். மாற்றப்பட்டது பற்றி சட்டமன்றத்தில் இன்று (ஜனவரி10) கேள்வி எழுப்ப முயன்றார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவையில் இருந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து வெளிநடப்புக்கான காரணத்தை விளக்கினார்.

“குட்கா விவகாரம் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த 8-7-16 அன்று வருமான வரித்துறை குட்கா குடோன்களில் சோதனையிட்டபோது 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சோதனையின் போது யார் யாருக்கு எவ்வளவு மாமூல் கொடுக்கப்பட்டது என்று குறிக்கப்பட்ட டைரியும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

குறிப்பாக இப்போது டிஜிபியாக இருக்கும் ராஜேந்திரன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கெல்லாம் 40 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டதாக குட்கா டைரியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுபற்றி அப்போதைய வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர், தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன் ராவுக்கு கடிதம் எழுதினார்’’ என்று குட்கா ஃபிளாஷ்பேக்கை ரீவைண்ட் செய்த ஸ்டாலின் தொடர்ந்தார்.

“இது தொடர்பான வழக்கிலே நேர்மையான விஜிலென்ஸ் கமிஷனரை விசாரிக்குமாறு மதுரை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தை விசாரித்து வந்த அதிகாரி ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ். நேற்று முன் தினம் மாற்றப்பட்டு விஜிலென்ஸ் கமிஷனராக மோகன் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 10 ஜன 2018