மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

ஸ்டிரைக்: தொழிலாளர் நல ஆணைய அலுவலகங்கள் முற்றுகை!

ஸ்டிரைக்: தொழிலாளர் நல ஆணைய அலுவலகங்கள் முற்றுகை!

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் தொழிலாளர் நல ஆணைய அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 4 முதல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்றுடன் போராட்டம் 7ஆவது நாளை எட்டியுள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொங்கலுக்கு ஊருக்குச் செல்லும் சென்னைவாசிகள் பேருந்து வசதி இன்றி சிரமப்படுகின்றனர். இதற்கிடையே தற்காலிக ஓட்டுநர்களால் இயக்கப்படும் பேருந்துகள் விபத்துக்குள்ளாவதால் மக்கள் பயணம் செய்வதற்கு அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது .

அப்போது, தொமுச செயலாளர் சண்முகம்,” பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைத் தர முடியாது என்று கூறுவது சட்டப்படி குற்றம். நீதிமன்றம் எங்களுக்கு முறையான தீர்ப்பு வழங்க வேண்டும். பொங்கலுக்குச் சிறப்பு பேருந்துகளை இயக்க எங்களுக்கும் விருப்பம்தான். இதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் நீடிக்கும் நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்” என்று கூறியுள்ளார்.

போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 300 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழகமே முடங்கி இருக்கிறது. ஆனால் ஓரிரு தினங்களில் நிலைமை சரியாகிவிடும். பயணிகள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதன் 10 ஜன 2018