மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

த்ரிஷா இருக்கிறாரா, இல்லையா?

த்ரிஷா இருக்கிறாரா, இல்லையா?

சாமி ஸ்கொயர் படத்தில் திரிஷா இருக்கிறாரா இல்லையா என்பது தான் கோலிவுட் வட்டாரத்தில் தற்போது விடை தெரியாத கேள்வி.

சாமி படத்தின் முதல் பாகத்தில் த்ரிஷா நடித்திருப்பதால் இரண்டாம் பாகத்திலும் அவரைப் படக்குழு ஒப்பந்தம் செய்தது. அதே போல் கீர்த்தி சுரேஷும் கதாநாயகியாக ஒப்பந்தமானார். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இந்த படத்தின் 50 சதவீதப் படப்பிடிப்பு நடைபெற்றது. சில நாள்களுக்கு முன் திருநெல்வேலியில் படப்பிடிப்பு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

படைப்பு சார்ந்த கருத்து வேற்றுமைகளால் த்ரிஷா படத்திலிருந்து விலகியதாகத் தகவல் வெளியானது. ஆனால் இயக்குநர் ஹரி திருநெல்வேலியில் படப்பிடிப்பு தளத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் போது, “த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்” என உறுதி செய்தார். ஆனால் தற்போது த்ரிஷா இந்த படத்தில் தான் நடிக்கப்போவதில்லை என மறுக்க படக்குழு தயாரிப்பாளர்கள் சங்கத்தை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் ஆறுச்சாமியாக நடித்த விக்ரமுக்கு மனைவியாக த்ரிஷா நடித்தார். 29 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையில் த்ரிஷா விக்ரமுக்கு அம்மாவாக நடிக்கிறார். மேலும் இதில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். த்ரிஷா, கீர்த்தி இருவரும் கதாநாயகிகளாக நடித்துவரும் நிலையில் தலைமுறை இடைவெளி உள்ள கதாபாத்திரத்தில் நடிப்பது தனது திரைப்பயணத்தை பாதிக்கும் என்பதால் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார் என கோலிவுட் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதன் 10 ஜன 2018