புதிய திட்டத்துடன் ஜியோவுடன் மோதும் ஏர்டெல்!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 கட்டணத்திலான புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஜியோ வழங்கும் சலுகைகளைப் போலவே 70 நாட்கள் கால வரம்பில் ஏர்டெல் வழங்குகிறது.
இந்திய தொலைத் தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நுழைந்த பிறகிலிருந்தே கடுமையான போட்டி நிலவி வருகிறது. குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கி வரும் ஜியோவுடனான தங்களது போட்டியை வலுப்படுத்தும் விதமாகப் பிற நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள, பல்வேறு சலுகைகளைக் குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமான ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 கட்டணத்திலான புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஏர்டெல் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 70 நாட்களுக்குத் தினசரி 1 ஜி.பி. அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவுடன் வரம்பற்ற அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். சலுகைகள் வழங்கப்படுகின்றன.