ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!


போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பேருந்து சேவைகள் முடங்கியுள்ளதால், சென்னை புறநகர் ரயில் சேவை சூடுபிடித்துள்ளது. இதனால் தெற்கு ரயில்வே ரயில் பயணிகளின் எண்ணிக்கையில் 20 சதவிகிதம் உயர்வு ஏற்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு கோரி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து ஏழாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் சென்னை வாசிகளும், தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பும் இதர மாவட்ட மக்களும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றனர். பேருந்து சேவை முடங்கியுள்ளதால் சென்னை மக்கள் பெருமளவில் ரயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். சென்னை மக்களுக்கு உதவும் வகையில் தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவில் கூடுதலாகத் தினசரி 30 புறநகர் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.