மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

டெங்குவில் தோல்வி: வெள்ளை அறிக்கை வேண்டும்!

டெங்குவில்  தோல்வி: வெள்ளை அறிக்கை வேண்டும்!

சுகாதாரத்துறை செயல்பாடுகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருப்பதாக தமிழக முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இந்நிலையில், பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணியோ, “டெங்கு நோய்த் தடுப்பு மற்றும் நோய் கண்டுபிடிக்கும் பணிகளில் தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக மத்திய அரசு குற்றஞ்சாற்றியிருக்கிறது. இத்தகைய அவலத்திற்காக தமிழக அரசு வெட்கப்பட வேண்டும்’’ என்று கடுமையாக சாடியிருக்கிறார்.

2017-ஆம் ஆண்டில் டெங்குக் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலம்; அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்டது.

‘’தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு 63 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவித்தாலும், உண்மையில் 500-க்கும் மேற்பட்டோர் டெங்குக் காய்ச்சலுக்கு உயிரிழந்திருக்கிறார்கள்; 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் உண்மை. தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீவிரமாக இருந்த போது, தில்லி எய்ம்ஸ் மருத்துவ நிறுவன பேராசிரியர் அசுதோஷ் பிஸ்வாஸ் தலைமையிலான மத்தியக்குழு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெங்குக் காய்ச்சல் குறித்து ஆய்வு செய்தது. அதனடிப்படையில் அக்குழுவினர் மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ள 23 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் டெங்கு காய்ச்சலை அரசு கையாண்ட விதத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்’’ என்று எடுத்துக் காட்டியுள்ளார் அன்புமணி.

டெங்குக் காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களை ஒழிக்க தெருக்களிலும், வீடுகளுக்கு வெளியிலும் மாலத்தியான் எனப்படும் பூச்சிக்கொல்லி மருந்தைக் கொண்டு தான் புகை மூட்டம் போட வேண்டுமென டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், டெங்குக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னையில் டெங்குக் கொசுக்களை ஒழிக்க பைரெத்ரம் எனப்படும் சூரியகாந்திப் பூ குடும்பத்தைச் சேர்ந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் பைரெத்ரின் என்ற மருந்தைக் கொண்டு தான் புகை மூட்டம் போடப்பட்டுள்ளது. இது மிகவும் குறைந்த சக்தி கொண்டதாகும்.

தமிழகத்தில் மாலத்தியான் மருந்து தேவையான அளவு இருக்கும் போதிலும் சென்னை மாநகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக அந்த மருந்து சிறிதளவு கூட இருப்பு இல்லை என்றும், அதனால் பைரெத்ரின் மருந்தைக் கொண்டு தான் தான் சென்னை முழுவதும் புகை மூட்டம் போடப்பட்டதாகவும், இது டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய விதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும் மத்தியக் குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இதை தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார் பாமகவின் இளைஞரணித் தலைவர்.

மேலும், ‘’டெங்குக் காய்ச்சலைக் கண்டறிவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் மையங்களாக 70 ஆய்வகங்கள் அறிவிக்கப்பட்டன. எலிசா அடிப்படையிலான என்.எஸ்1 சோதனையின் மூலம் தான் டெங்குக் காய்ச்சலை தொடக்க நிலையில் கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு கண்டுபிடிப்பதன் மூலம் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் குணப்படுத்த முடியும் என்பதுடன், தடுப்பு நடவடிக்கைகளை உரிய காலத்தில் தொடங்குவதன் மூலம் நோய் பரவாமலும் தடுக்க முடியும். ஆனால், தமிழகத்திலுள்ள 70 ஆய்வகங்களிலும் இத்தகைய ஆய்வுகளை செய்யாமல் சாதாரண ஆய்வுகள் மட்டுமே நடத்தப்பட்டதால் டெங்கு காய்ச்சலை தொடக்க நிலையிலேயே கண்டறிய முடியாமல் போய்விட்டது என்று தமிழகத்தில் ஆய்வு செய்த மத்தியக்குழு மத்திய சுகாதாரத்துறையில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் டெங்கு காய்ச்சலுக்கு இவ்வளவு பேர் இறந்தனர் என்பது மத்தியக் குழுவினர் அளித்த அறிக்கையில் ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்திருக்கும் அன்புமணி,

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 10 ஜன 2018