மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

இருவேறு இடங்களில் பேருந்து விபத்து: மாணவர்கள் பலி!

இருவேறு இடங்களில் பேருந்து விபத்து: மாணவர்கள் பலி!

தமிழகத்தில் இன்று காலை இருவேறு இடங்களில் பேருந்து விபத்துக்குள்ளானதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தனியார் பேருந்து ஒன்று அளவுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் சென்றது. புளியம்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த டிராக்டர் மீது மோதி பேருந்து, தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக தனியார் பேருந்தில் அளவுக்கு அதிகமாகப் பயணிகள் ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதே போல் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே தனியார் பள்ளியின் பேருந்தும், தனியார் கொரியர் நிறுவனத்தின் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி குழந்தைகள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனைக்கு அருகிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதால், காயமடைந்த குழந்தைகளுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்குக் காரணமான வேன் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

புதன் 10 ஜன 2018