மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

கவனம் ஈர்த்த சோனி!

கவனம் ஈர்த்த சோனி!

உலகின் முன்னணி மொபைல் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் சோனி, நேற்று (ஜனவரி 9) புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகஸ் நகரில் நடைபெற்று வரும் CES எனப்படும் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் தங்களது புதுமையான கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன.

அதில் நேற்று சோனி நிறுவனம் 3 புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. அதில் XA2 என்ற மாடல் அதிக பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் வெளியான XA1 மாடல் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் 2,300mAh பேட்டரி சக்தி மட்டுமே கொண்டிருந்ததால் அது பெரும் கவலையாக பயனர்கள் இடையே இருந்து வந்தது. எனவே இந்த புதிய மாடலில் 3,300mAh பேட்டரி சக்தி கொண்டு வெளியிட உள்ளதாக சோனி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

XA2 மாடல் 6 இன்ச் திரையளவும், 4GB RAM மற்றும் 32GB இன்டெர்னல் வசதியும் கொண்டுள்ளது. பின்புறம் 23MP கேமராவும், 16MP டூயல் செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மிக துல்லியமான புகைப்படங்களை இந்த கேமராக்களில் எடுக்க இயலும் என சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி புதிய ஆன்ட்ராய்டு வெர்ஷன் 8.0 ஓரியோ இதில் வழங்கப்பட்டுள்ளதாகவும் சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இதில் புதிதாக பிங்கர் பிரிண்ட் வசதியை பின்புறம் இணைத்து வழங்கி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 10 ஜன 2018