மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

புத்தகக் கண்காட்சி: செங்கோட்டையன் தொடங்கி வைக்கிறார்!

புத்தகக் கண்காட்சி: செங்கோட்டையன் தொடங்கி வைக்கிறார்!

41வது சென்னை புத்தகக் கண்காட்சியை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று(ஜனவரி 10) தொடங்கி வைக்கிறார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 41வது சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ- இண்டியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று மாலை தொடங்குகிறது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கண்காட்சி அரங்கை திறந்து வைக்கிறார். இதில் தொழிலதிபர்கள் நல்லி குப்புசாமி, எம்.ஏ.எம்.ஆர். முத்தையா உள்ளிட்டோர் விருந்தினர்களாகப் பங்கேற்கும் விழாவில் பள்ளிக் குழந்தைகள் திரளாக கலந்துகொள்கின்றனர். பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறப்பு மேடை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியும் நடத்தப்பட உள்ளன.

இந்த புத்தகக் காட்சி வரும் ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் புத்தகக் காட்சியில் பிரபலங்கள் கலந்துகொண்டு பேச உள்ளனர். மின்னம்பலம் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டுள்ள புத்தகங்கள் ஸ்டால் எண் 379ல் கிடைக்கும்

தினமும் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும். புத்தகம் வாங்குபவர்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது. தமிழ் அரங்குகள் 428, ஆங்கில அரங்குகள் 234, மல்டிமீடியா அரங்குகள் 22, பொது அரங்கு 24 என 708 அரங்குகளுடன் கண்காட்சி நடக்க உள்ளது. தமிழ் 236, ஆங்கிலம் 102, மல்டிமீடியா 14, பொதுவானவர்கள் 24 என 376 பங்கேற்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும் புத்தகக் காட்சியை முன்னிட்டு 11ஆம் தேதி அந்தப் பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் இதனைத் திறந்து வைக்கிறார். பாரம்பரிய இசையைப் போற்றும் வகையில் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 10 ஜன 2018