மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

இறுதி வாக்காளர் பட்டியல்!

இறுதி வாக்காளர் பட்டியல்!

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜனவரி 10) வெளியிடப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஜனவரி 1ஆம் தேதியை தகுதிநாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் சேர்க்க, இறந்தவர்கள் பெயர்களை நீக்க, பிழைகளைத் திருத்தம் செய்ய, முகவரி மாற்றச் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மக்கள் அதற்கான விண்ணப்பங்களை அளித்தால், விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 2017 அக்டோபர் 3ஆம் தேதி இதற்கான திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டன. அன்றே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 7 கோடியே 93 லட்சத்து 78 ஆயிரத்து 485 மக்கள் தொகையில், 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 2 வாக்காளர்கள் இருந்தனர்.இதில், 2 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 492 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 98 லட்சத்து 268 பெண் வாக்காளர்களும் மற்றும் 5,242 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இருந்தனர்.

அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக அக்டோபர் மாதம் 8ஆம் தேதி மற்றும் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. வாக்காளர் அட்டை திருத்தப் பணிகள் அக்டோபர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன்பிறகு, வாக்காளர் அட்டைத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள நவம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் 4ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 10 ஜன 2018