நிவின் பாலி படத்தில் மோகன்லால்


நிவின் பாலி - ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் `காயம்குளம் கொச்சுண்ணி' வாழ்க்கை வரலாற்று படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ளார்.
ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. 19ஆம் நூற்றாண்டில் கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் வாழ்ந்த கொச்சுண்ணி என்பவரை பற்றிய படம் இது. இவர் ராபின்ஹுட் போலச் செல்வந்தர்களிடம் இருந்து பணம், பொருள்களைப் பறித்து நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார். அதனால் அந்தப் பகுதி மக்களின் தெய்வமாக இவர் வணங்கப்படுகிறார்.
1859இல் கொச்சுண்ணி போலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு கொச்சுண்ணி, அங்கேயே இறந்துள்ளார். இவருடைய வாழ்க்கையில் இடம் பெற்ற சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இதில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்க, மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ப்ரியா ஆனந்த் கொச்சுண்ணியின் மனைவியாக நடிக்கிறார். பாபி, சஞ்சய் ஆகியோர் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுத ‘36 வயதினிலே’ படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். பினோத் பிரதான் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார்.