மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

ஜனாதிபதியிடம் ஆளுநர் அளித்த அறிக்கை!

ஜனாதிபதியிடம் ஆளுநர் அளித்த அறிக்கை!

டெல்லியில் ஜனாதிபதி மற்றும் பிரதமரைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று (ஜனவரி 9) சந்தித்துப் பேசினார். ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது அவரிடம் அறிக்கை ஒன்றையும் புரோகித் அளித்தார்.

டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். அப்போது அவருக்குச் சால்வை அணிவித்து நினைவுப் பரிசும் வழங்கினார். நேற்று முன்தினம் தமிழகச் சட்டப்பேரவையில் உரையாற்றிய பன்வாரிலால் மத்திய அரசைப் பாராட்டிப் பேசியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அவரது டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. எனினும், பிரதமருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரைச் சந்தித்த பின்னர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை பன்வாரிலால் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது ஆந்திர மற்றும் தெலங்கானா ஆளுநர் நரசிம்மன், உத்தரப்பிரதேச ஆளுநர் ராம் நாயிக், திரிபுரா ஆளுநர் தத்காட்டா ராய் ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது, ‘ஆளுநர்கள் - வளர்ச்சியின் தூதுவர்கள்; சமுதாய மாற்றத்தில் ஆளுநர்களின் தத்துவார்த்த பங்கு’ என்ற பெயரிலான அறிக்கையை அவர்கள் ஜனாதிபதியிடம் வழங்கினர்.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில் பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஆட்சியாளர்களுடன் இணைந்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர்கள் புதிய வடிவத்தைக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழக ஆளுநர், ஆந்திர மற்றும் தெலங்கானா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்கள் அடங்கிய குழு ஒன்றையும் அவர் ஏற்படுத்தியிருந்தார். அதன் அடிப்படையிலேயே தற்போது தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் அறிக்கை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 10 ஜன 2018