மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

ப்ரியா: குவியும் வாய்ப்புகள்!

ப்ரியா: குவியும் வாய்ப்புகள்!

ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய ப்ரியா பவானி சங்கர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து சின்னத்திரையிலே வலம்வந்த ப்ரியா, ‘மேயாத மான்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார். முதல் படமே வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்த வாய்ப்புகள் அவரைத் தேடிவந்து கொண்டிருக்கின்றன.

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஜுங்கா’ படத்தில் ப்ரியா ஒப்பந்தமாகியுள்ளார். ‘வனமகன்’ படத்தின் மூலம் பிரபலமான சாயிஷா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இந்தப் படத்தை இயக்குகிறார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராகவும் ப்ரியா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் தென்காசி பகுதிகளில் படமாக்கப்படுகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 10 ஜன 2018