மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

நிலக்கடலை கொள்முதல் பணிகளில் பாதிப்பு!

நிலக்கடலை கொள்முதல் பணிகளில் பாதிப்பு!

போதிய சணல் பைகள் இல்லாமல் குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலக்கடலையைக் கொள்முதல் செய்யும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நிலக்கடலை வரத்து அதிகமாக இருந்தும் சணல் பைகள் மற்றும் கிடங்குகளின் பற்றாக்குறையினால் ராஜ்கோட், ஜாம்நகர், ஜுனாகத் மற்றும் போர்பந்தர் ஆகிய மாவட்டங்களில் அரசின் நிலக்கடலை கொள்முதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மூடுபனி காரணமாக ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து பாதிப்பினால் கொல்கத்தாவிலிருந்து குஜராத்துக்கு வரவேண்டிய சணல் பைகள் தாமதமாக வந்து சேருகின்றன. இதன் காரணமாக குஜராத்தின் சில கொள்முதல் மையங்களில் நிலக்கடலை கொள்முதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

குஜ்காட் நிறுவனம், குஜராத் மாநிலக் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் அமைப்பு, பானாஸ் டெய்ரி, சபர் டெய்ரி மற்றும் குஜ்ப்ரோ அக்ரிபிசினஸ் ஆகிய நான்கு மையங்களையும் கொள்முதல் பணிகளை மேற்கொள்ள குஜராத் அரசு அனுமதிக்கிறது. நடப்பாண்டின் ஜனவரி 4ஆம் தேதி வரை குஜராத்தில் மட்டும் 678,646 டன் நிலக்கடலை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.3,019 கோடி ஆகும். குஜ்காட் நிறுவனம் மட்டுமே 4.3 லட்சம் டன் நிலக்கடலையைக் கொள்முதல் செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ.1,900 கோடி ஆகும். இந்நான்கு நிறுவனங்களும் கடந்த அக்டோபர் மாதம் முதல் 260 மையங்கள் மூலமாக நிலக்கடலை கொள்முதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

“நிலக்கடலையின் சந்தை விலையானது குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.4,500 (குவிண்டால் ஒன்றுக்கு) விட மிகவும் சரிந்து, ரூ.3,250 முதல் ரூ.3,500 வரையில் குறைந்தது. எனவே, அரசு சார்பாக நியமிக்கப்பட்ட மாநில கொள்முதல் நிறுவனங்கள் நிலக்கடலையைக் கொள்முதல் செய்யும் பணியைத் தொடங்கின” என்று குஜராத் துணை முதல்வரான நிதின் படேல் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

புதன் 10 ஜன 2018