மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

அடிமேல் அடி வாங்கும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம்!

அடிமேல் அடி வாங்கும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம்!

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கோவாவில் செயல்படுத்த இருந்த கப்பல் கட்டும் பணியை மத்திய அரசு கைவிட முடிவு செய்துள்ளது.

எதிரி நாட்டுக் கப்பல்களால் நீருக்கடியில் புதைக்கப்படும் கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து அவற்றை அழிப்பதற்குக் கண்ணி வெடிகளை அகற்றும் கப்பல்கள் (MCMV) பயன்படுகின்றன. சீனா கடற்படை தற்போது இந்தியப் பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ள நிலையில், நமது கடற்பரப்பைப் பாதுகாக்க இத்தகைய கப்பல்கள் மிக அவசியமாகிறது. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையைப் பாதுகாக்க குறைந்தது 24 மைன்ஸ்வீப்பர் கப்பல்கள் தேவை. ஆனால், தற்போது நான்கு கப்பல்கள் மட்டுமே உள்ளன. அவையும் 30 ஆண்டுகள் பழைமையானது.

எனவே, புதிய கப்பல்களைப் பெறுவதற்கான செயல்முறைகளை 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியக் கடற்படை தொடங்கியது. இந்த நிலையில், மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக, தென் கொரியாவின் கங்கனம் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் 12 கப்பல்களை உருவாக்குவதற்கு ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.700 கோடி செலவில் மைன்ஸ்வீப்பர் கப்பல் கட்டுவதற்கான கட்டமைப்புகள் கோவா கப்பல் கட்டும் தளத்தில் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்த ஒப்பந்தம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் தகவல்களை பகிர்வது மற்றும் நிதி தொடர்பான சிக்கல்கள் காரணமாக ஒப்பந்தம் ரத்தாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணியைப் புதிதாக தொடங்கும்படி கோவா கப்பல் கட்டும் தளத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அடிமேல் அடி

கடந்த மூன்றாண்டுகளில் மேக் இன் இந்தியா திட்டம் மூலம் பாதுகாப்புத் துறையில் எந்த முக்கிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்பது இங்கு கவனத்தில்கொள்ளத்தக்கது. அதிகாரத்துவ சிக்கல்கள், நீண்ட கால நடைமுறைகள், வணிக மற்றும் தொழில்நுட்பச் சச்சரவுகள் போன்றவை இதற்குக் காரணமாக சொல்லப்படுகின்றன.

போர்க்கள மேலாண்மை அமைப்பு தொடர்பான ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தையும் இந்திய ராணுவம் நிறுத்தத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. குறைந்தது 3.5 லட்சம் கோடி மதிப்பிலான ஆறு பெரிய திட்டங்கள் முறையான இறுதி ஒப்பந்தங்கள் ஆகாமல் பல்வேறு நிலைகளில் முடங்கியுள்ளன.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 10 ஜன 2018