வாட்ஸப் வடிவேலு


“மச்சான் கோயம்பேடுல இருக்கேன். ஊருக்கு போக வண்டி இல்லடா. என்ன பண்றது?”
“கைல லைசென்ஸ் வெச்சுருந்தா... எனக்கு வண்டி ஓட்ட தெரியும்னு சொல்லு. உன்கிட்ட ஒரு பேருந்தைக் கொடுப்பாங்க. கொண்டுபோய் திருநெல்வேலில நிறுத்திட்டு வீட்டுக்குப் போ...”
உண்மைதான். அந்த அளவுக்கு இருக்கு நிலைமை. ஸ்டிக்கர் ஒட்டியிருக்காங்க, வழக்கம்போல பேருந்துகள் ஓடும்னு. ஆனா ஓட்டுறவங்களுக்கோ, கண்டக்டருக்கோ யூனிபார்மே இல்லை. (லைசென்ஸ் இருக்கா இல்லையான்னு கேட்டியா வடிவேலுன்னுல்லாம் கேட்கப்படாது).
“ஏம்ப்பா டிரைவரே பஸ்ஸை எடுய்யானா... கீழ குனிஞ்சி என்னத்தைய்யா தேடற..?”
“ஸ்டார்ட் பண்ண சைடுல ஒரு ஹேண்டில் ராடு நீளமா இருக்குமே... அதைதான்ய்யா...”
“அடேய்... ஆட்டோகாரனடா நீயி?”
சரிவாங்க... அடுத்து என்ன மெசேஜ்னு பார்க்கலாம்.
தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும்
மிதிபட்ட எறும்புக்கு இரண்டுமே ஒன்றுதான்!
நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை!
அழகாக அமைந்த வாழ்க்கையைக்கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை!
'சந்தோஷமா வாழறேன்னு காட்டிக்கொள்ளத்தான் பணம் தேவைப்படுகிறது!
உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை.
நோய் வரும்வரை உண்பவன்... உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!
பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல. ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல!
அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.
வெட்டுங்கள் - மழை நீரைச் சேமிப்பேன் என்கிறது குளம்!
நேர்மையாகச் சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை!
இவ்வுலகில் வாழ கற்றுக்கொண்டதைவிட வலிகளை மறைத்துச் சிரிக்க கற்றுக்கொண்டதே அதிகம்!
பகலில் தூக்கம் வந்தால், உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம். இரவு தூக்கம் வரலைன்னா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்!
துரோகிகளிடம் ‘கோபம்’ இருக்காது. கோபப்படுபவர்களிடம் ‘துரோகம்’ நிச்சயமாக இருக்காது!