மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

“அப்பாடா எல்லாரும் ஒரு வழியா நடக்க ஆரம்பிச்சிட்டாங்க” என்று சந்தோஷப்பட முடியவில்லை. ஏனெனில் பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தினால் ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். காசு இருப்பவர்கள் கார்களில் செல்கின்றனர். சிலர் ஆட்டோக்களில் செல்கின்றனர். எத்தனை நாள்கள்தான் ஆட்டோவுக்கு 100 ரூபாய் கொடுப்பது என்று நடந்து செல்பவர்களெல்லாம் கொடுமையின் உச்சம்.

உடல் எடையைக் குறைக்க நடக்க ஆரம்பிக்கும் கூட்டம் அந்தப் பக்கம் நடக்க, காய்கறிகளையும் பூ வியாபாரத்துக்கானவற்றையும் வாங்கி, தலையில் சுமந்து இந்தப் பக்கம் செல்பவரைக் கண்டால் சற்றே மனம் கனக்கிறது. கனத்த எடை கொண்டவர்களே... வாருங்கள். அப்படியே நடந்து சென்று, சுமையைத் தலையில் சுமந்து செல்பவர்களிடம் அதை பகிர்ந்து செல்லலாம்.

பானை போன்ற வயிற்றைக் குறைக்க மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சிதான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

காரமான உணவுப் பொருள்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகுத்தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

இரண்டு டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றை சாதாரண நீரில் குடித்துவந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரைக் குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

இதை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு உடல் எடையும் விரைவில் குறையும். அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 10 ஜன 2018