மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

சென்னையில் இன்று புத்தகக் காட்சி தொடக்கம்!

சென்னையில் இன்று புத்தகக் காட்சி தொடக்கம்!

சென்னையில் 41ஆவது புத்தகக் காட்சி இன்று அமைந்தகரை ஜெயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்குகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 41ஆவது புத்தகக் காட்சி இன்று (ஜனவரி 10) அமைந்தகரை ஜெயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்குகிறது.

இன்று மாலை 5 மணிக்கு நடக்கவிருக்கும் புத்தகக் காட்சி தொடக்க விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு புத்தகக் காட்சியை தொடங்கி வைக்கிறார். இந்த புத்தகக் காட்சி வரும் ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் புத்தகக் காட்சியில் பிரபலங்கள் கலந்துகொண்டு பேச உள்ளனர்.

தினமும் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும். புத்தகம் வாங்குபவர்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது. 700க்கும் மேற்பட்ட அரங்குகளில் லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் இந்தக் காட்சியில் இடம்பெறுகின்றன. மேலும் புத்தகக் காட்சியை முன்னிட்டு 11ஆம் தேதி அந்தப் பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது.

வாகனங்களை நிறுத்துவதற்கும் சிறப்பு இட வசதியும், குடும்பத்துடன் வருபவர்கள் உணவகம் செல்லவும் மற்றும் ஓய்வு எடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 10 ஜன 2018