கிச்சன் கீர்த்தனா


இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், (வேறு எதற்கு? பொங்கல் திரு நாளுக்குத்தான்!) கரும்புகளும் கதம்ப உணவுகளும் காளை மாடுகளும் கண்முன்னே வந்து சென்று கொண்டிருக்கும். இன்றிலிருந்தே பொங்கல் ரெசிபிகளை செய்து வரவேற்போம் வாருங்கள் பொங்கல் திருநாளை. முதலில் பழவகை பொங்கல் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப்
ஆப்பிள் பழம் - 10 கப்
மாதுளை, திராட்சை, அன்னாசி, வாழைப்பழம், பேரீச்சை போன்ற பழக்கலவை – ஒரு கப்
தேங்காய்ப் பால் - முக்கால் கப்
பனைவெல்லம் - முக்கால் கப்
ஏலக்காய் – சிறிதளவு
திராட்சை – சிறிதளவு
முந்திரி - சிறிதளவு
நெய் – இரண்டு டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அரிசியைக் கழுவி இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, உப்புப் போட்டு ஐந்து அல்லது ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஊறிய அரிசியை தண்ணீருடனே குக்கரிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோ வைத்து குழையாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
பனைவெல்லத்தைப் பொடித்து தேங்காய்ப்பாலுடன் சேர்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு அடுப்பில் ஏற்றி வெல்லம் கரைந்து வந்ததும் மண் மற்றும் தூசு இல்லாமல் வடிகட்டி அதை ஒரு வாணலியில் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க ஆரம்பித்ததும், வேகவைத்துள்ள சாதத்தை இதில் கொட்டி ,விடாமல் கிண்டவும். பழக்கலவையைம் கொட்டி, அதனுடன் திராட்சை, முந்திரி ஆகியவற்றை நெய்யில் வறுத்து, ஏலக்காய் பொடி செய்து, எல்லாவற்றையும் சேர்த்து இறுகி வந்ததும் இறக்கவும்.
கீர்த்தனா சிந்தனைகள்: