மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

டெல்லியை உலுக்கிய ஜிக்னேஷ்

டெல்லியை உலுக்கிய ஜிக்னேஷ்

‘மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய ஜனநாயகத்துக்கும் அரசியலமைப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது’ என்று ஜிக்னேஷ் மேவானி குற்றம் சாட்டியுள்ளார்.

மும்பை பீமா கோரிகாவுன் என்னுமிடத்தில் போர் நினைவஞ்சலி செலுத்த சென்ற தலித் மக்கள்மீது மராத்தாக்கள் எனப்படும் உயர்சாதி வகுப்பினர் தாக்குதல் நடத்தினர். இதனால் மும்பை மற்றும் புனேயில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் தாக்குதலைக் கண்டித்து நேற்று (ஜனவரி 9) குஜராத் மாநில எம்.எல்.ஏவான ஜிக்னேஷ் மேவானி டெல்லி நாடாளுமன்ற வீதியில் ‘சமூகநீதி பேரணி’ என்ற தலைப்பில் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தார். டெல்லி காவல் துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையிலும் தடையை மீறி பேரணி நடைபெற்றது.

கல்வி உரிமை, வேலைவாய்ப்பு, பாலின சமத்துவம் போன்ற முழக்கங்கள் இந்தப் பேரணியில் பலமாக முன்வைக்கப்பட்டன. இதில் ஜேஎன்யு மாணவர்களான கண்ணையா குமார், உமர்காலித், ஷீலாரசித் உள்ளிட்டோரும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், விவசாயிகள் சங்கத்தலைவர் அகில் கோகாய் போன்றோரும் பங்கேற்றனர்.

பேரணிக்குப் பிறகு பேசிய ஜிக்னேஷ் மேவானி, “நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தியாவின் அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுதான் குஜராத் மாடல்” என்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 10 ஜன 2018