நன்னடத்தை சான்றிதழ் இருந்தால் மட்டுமே போக முடியும்!


வேலை மற்றும் படிப்புக் காரணமாக ஐக்கிய அரபு நாடுகளுக்குச் செல்பவர்கள் நன்னடத்தை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறை பிப்ரவரி 4ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். நன்னடத்தை சான்றிதழ் ஐக்கிய அரபு துதரகத்தால் அங்கீகரிக்க வேண்டும் அல்லது வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்தின் வாடிக்கையாளர் சேவை மையங்கள் பார்வையிட்டு அனுமதி அளிக்க வேண்டும். இந்த சான்றிதழுடன் கடந்த ஐந்தாண்டு காலமாக எங்கே இருந்தார் என்பதையும் விசா விண்ணப்பிப்பவர் தெரிவிக்க வேண்டும்.
ஐக்கிய அரபு நாடுகளில் பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது உலகில் மிகவும் அமைதியான நாடுகளில் ஒன்று என்ற பெயரும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் அந்த விசாவில் பயணம் செய்தால், அவர்கள் நன்னடத்தை சான்றிதழ் பெற அவசியமில்லை.