மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

பவுலர்கள் முன்னேற்றம்: பேட்ஸ்மேன்கள் பின்னடைவு!

பவுலர்கள் முன்னேற்றம்: பேட்ஸ்மேன்கள் பின்னடைவு!

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் இரு அணி பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டதால் அதிக புள்ளிகள் பெற்று தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இந்திய - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டி முடிவில் இரு அணி வீரர்களின் புள்ளிகள் மாற்றம் அடைந்ததால், டெஸ்ட் தரவரிசையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கஜீசோ ராபாடா 888 புள்ளிகள் பெற்று தரவரிசையில் முதலிடம் பெற்றார். அவர் முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 75 ரன்களை வழங்கி இருந்தார்.

அதேபோல் இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி 110 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்ததால் 8 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 22ஆவது இடத்தைப் பெற்றார். தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் ஆறாவது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

புதன் 10 ஜன 2018