மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

வாழைக் காய்களைப் பழுக்க வைக்க மையம்!

வாழைக் காய்களைப் பழுக்க வைக்க மையம்!

அஸ்ஸாம் மாநில வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் வாரியம், வாழைக் காய்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கும் மையம் ஒன்றை கவுகாத்தியில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்படும் பச்சை வாழைப் பழங்கள் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளதைத் தடுக்கும் பொருட்டு, செயற்கையாகப் பழுக்க வைக்கும் மையம் அமைக்க அஸ்ஸாம் மாநில வேளாண்மை சந்தைப்படுத்துதல் வாரியம் திட்டமிட்டுள்ளது. பச்சை வாழைப் பழங்கள் சிறிது நேரத்திற்கெல்லாம் மஞ்சளாக மாறுவதும், ஓரிரு நாளில் கருப்பு திட்டுக்கள் தோன்றுவதும் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களின் அறிகுறியாகும். இத்தகைய பழங்கள் ருசியற்றதாகவும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றன.

பயோமாஸ் மூலமே செயல்படும் இம்மையங்களில் மின்சாரம் உபயோகிக்கப்படுவதில்லை. இம்மையத்தை அமைப்பதிற்கு ரூ.1 கோடி செலவாகும். இம்மையத்தில் பழங்களைச் சேமித்து வைப்பதிற்கான அறைகள் இருக்கும். பழுக்க வைப்பதற்காக அவ்வறைகளில் எத்திலின் செலுத்தப்படும். இதில் நாள் ஒன்றுக்கு 20,000 வாழைக் காய்களைப் பழுக்க வைக்க முடியும். தேவைப்படும் போது பப்பாளியையும் பழுக்க வைக்கலாம். தற்போது சந்தைகளில் விற்பனையாகும் பழங்கள் கால்சியம் கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்டவையாகும். அப்படிப்பட்ட பழங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ளது. மீறி விற்போர் மீது உணவு மாசுறுதல் சட்டம் - 1955-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 9 ஜன 2018