மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

சட்டப்பேரவை வாயிலை மூடிய எம்எல்ஏக்கள்!

சட்டப்பேரவை வாயிலை மூடிய எம்எல்ஏக்கள்!

புதுச்சேரி சட்டப்பேரவை வாயில் கதவை இழுத்து மூடி அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பண்டிகை காலங்களில் அரசு சார்பில், ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் இலவச பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். நிதி நெருக்கடி காரணமாக புதுச்சேரியில் கடந்த தீபாவளிக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி, சேலைகள் போன்றவை வழங்கப்படவில்லை. இந்நிலையில் பொங்கல் பொருட்கள் கண்டிப்பாக வழங்கப்படும் என முதல்- அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்திருந்தார். இதற்காக அரசு சார்பில் கோப்பு தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது. இந்தக் கோப்பை தலைமை செயலாளர், சிகப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் பொங்கல் பொருட்கள் வழங்கினால் போதும் என குறிப்பிட்டு திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து மீண்டும் அரசு சார்பில் ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் பண்டிகை பொருட்களைப் பாரபட்சமின்றி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கேட்டு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் கோப்பு நிதித்துறையிடம் உள்ளது. இதனால், பொங்கல் இலவசப் பொருட்களும் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 9) காலை அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் எம்எல்ஏக்கள் பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சட்டப்பேரவை நுழைவு வாயிலுக்கு வந்தனர். அங்கு இலவச பொருட்கள் வழங்காத காங்கிரஸ் அரசையும், ஆளுநரையும் கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் நுழைவு வாயிலை இழுத்து மூடிவிட்டு சட்டப்பேரவை வளாகத்தில் மைய மண்டபத்திற்குச் செல்லும் படிக்கட்டுகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 9 ஜன 2018