மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

மழையால் இழந்த வெற்றி!

மழையால் இழந்த வெற்றி!

நியூசிலாந்தில் உள்ள நெல்சன் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் போட்டியை நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

இன்று (ஜனவரி 9) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் 39 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் களமிறங்கிய முகம்மது ஹஷிப் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். பாகிஸ்தான் சரிவிலிருந்து மீண்டு நல்ல ஸ்கோரினை எட்டியது. அவரைத் தொடர்ந்து சாதப் கான், ஹசன் அலி இருவரும் ஆளுக்கொரு அரை சதம் அடித்து அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றனர். பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 246 ரன்களைச் சேர்த்து 9 விக்கெட்டுளை இழந்தது.

247 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் காலின் முன்ரோ ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 14 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்களைச் சேர்த்திருந்தது. திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் டக் வர்த் லூயிஸ் விதிப்படி 25 ஓவர்களுக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மார்ட்டின் கப்தில், ராஸ் டைலர் ஜோடி இந்த ரன்களை அடித்து நியூசிலாந்து அணியை வெற்றிபெறச் செய்தனர். கப்தில் 86 ரன்களும், டைலர் 45 ரன்களும் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது நியூசிலாந்து அணி. மழை குறுக்கிடாமல் இருந்திருக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்குப் பெரும் சவாலைத் தந்திருக்கும் என்று கூறலாம்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 9 ஜன 2018