மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

ஆண்டாள் சர்ச்சை: வைரமுத்து வருத்தம்!

ஆண்டாள் சர்ச்சை: வைரமுத்து வருத்தம்!

ஆண்டாள் குறித்து நான் கூறிய கருத்து என்னுடைய கருத்தல்ல, ஓர் ஆய்வாளரின் தனிக் கருத்து என்று கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 7ஆம் தேதி தினமணி நாளிதழ் சார்பில் ஆண்டாள் குறித்த நிகழ்வு ஓன்று நடத்தப்பட்டது. விழாவில் கலந்துகொண்டு ஆண்டாள் பற்றி உரையாற்றிய கவிஞர் வைரமுத்துவின் பேச்சு சர்ச்சைக்குரிய விதத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து வைரமுத்துவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன.

வைரமுத்துவைக் கண்டித்து இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் இன்று (ஜனவரி 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரம்பரியமிக்க தினமணி நாளிதழ் ராஜபாளையத்தில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வைரமுத்து, ஆண்டாள் ஒரு தாசி எனப் பேசியது பக்தர்களின் மனங்களைப் புண்படுத்தும் செயல். இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இம்மாதத்தில் உலக முழுவதும் தமிழ்ச் சமுதாயம் ஆண்டாளின் திருப்பாவை விழா கொண்டாடப்பட்டுவருவதைக் காண்கிறோம். ஔவையாரும், ஆண்டாளும் தமிழ்ச் சமுதாயத்திற்குச் செய்துள்ள சேவைக்கு, உலகம் உள்ள அளவும் தமிழர்களாகிய நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

வைரமுத்து, தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இல்லையேல் அவரது கருத்திற்கு உரிய பதிலை அவருக்குப் புரியும் மொழியில் மக்கள் அளிக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதை நினைவூட்டுகிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாசுரங்கள் மூலம் தமிழ் வளர்த்த "சூடிக் கொடுத்த சுடர்க்கொடி" திருப்பாவை தந்த ஆண்டாள் கோதை நாச்சியாரைப் பற்றி தவறான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

ஆண்டாள் மீது எவரோ சொன்ன கருத்தை வரலாற்றுத் திரிபைத் திணித்துவிட்டார். கண்ணியமிக்க தமிழ்த்தாய் ஆண்டாளை போற்றுவதை விடுத்து, தூற்றுவது என்பது தன்னைத் தானே தூற்றுவதற்கு சமம். இதில் நாத்திகம், ஆத்திகத்திற்கு வேலையில்லை. தமிழ் வளர்த்த ஆண்டாளை தலை மீது தூக்கி கொண்டாட வேண்டாமா?, எனவே நாங்கள் பெரிதும் நேசிக்கும் எங்கள் மண்ணின் மைந்தன் வைரமுத்து தன்னுடைய வார்த்தையை திரும்பிப் பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 9 ஜன 2018