மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

ஸ்மார்ட் கார்டில் காஜல்: அமைச்சர் விளக்கம்!

ஸ்மார்ட் கார்டில் காஜல்: அமைச்சர் விளக்கம்!

ரேஷன் கார்டுக்கு பதிலாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டில் நடிகை படம் அச்சிடப்பட்டது குறித்து அமைச்சர் காமராஜ் சட்டமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரேஷன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்டுகளை வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது. ஆனால், முறையாகத் திட்டமிடாமல் ஸ்மார்ட் கார்டு விநியோகம் செய்யப்படுவதாகவும், ஸ்மார்ட் கார்டு அச்சிடுவதில் அலட்சியம் காட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த சரோஜா என்பவரின் ஸ்மார்ட் கார்டில் அவருக்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று ( ஜனவரி 9) சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது குளச்சல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் எழுந்து, "ஸ்மார்ட் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் படமும் அச்சிடப்படுமா என்றும், ஸ்மார்ட் கார்டு அச்சிடப்படுவதில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. ஸ்மார்ட் கார்டில் நடிகை படம் இடம்பெற்றது எப்படி என்ற கேள்வியையும் எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த உணவுத் துறை அமைச்சர் காமராஜ், "ஸ்மார்ட் கார்டுகள் கொடுக்கும் பணி 99 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது. தற்போது வரை ஒரு கோடியோ 88லட்சத்து 36 ஆயிரத்து 907 குடும்ப அட்டைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் அவர் நடிகை படம் இடம்பெற்றதற்கு அளித்த விளக்கத்தில், "ஸ்மார்ட் கார்டு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காகவும், பொதுமக்கள் தங்கள் புகைப்படத்தைத் தாங்களே பதிவேற்றிக்கொள்ளலாம் என்பதற்காகவும், மொபைல் ஆப்பிலிருந்து புகைப்படத்தைப் பதிவேற்ற ஒரு வாய்ப்பு அளித்தோம்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

செவ்வாய் 9 ஜன 2018