மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

இது மைனாரிட்டி அரசுதான்!

இது மைனாரிட்டி அரசுதான்!

மெஜாரிட்டி அரசு என்று அமைச்சர் தங்கமணி பேசியதற்கு பதில் கூற வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் சட்டப்பேரவையிலிருந்து இன்று (ஜனவரி 9)வெளிநடப்பு செய்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று கேள்விநேரத்தின் போது எதிர்க்கட்சிகள் ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பின. அப்போது பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை மெஜாரிட்டி அரசாங்கம் என்றும், எடப்பாடி தலைமையில் மீதமுள்ள மூன்றரை ஆண்டுகால ஆட்சி முழுமையாக நிறைவு செய்வோம் என்றும் கூறினார். இதற்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

வெளிநடப்புக்குப் பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், "ஆர்கே நகர் தோல்விக்கு பிறகு முதல்வரும், துணை முதல்வரும் நான் திமுகவுடன் உடன்பாடு வைத்திருக்கிறேன் என்று சொல்வது உண்மையானால், இதே துணை முதல்வர் ஓபிஎஸ், அன்று எடப்பாடி தலைமையிலான அரசாங்கத்தை ஊழல் ஆட்சி என்று கூறினாரே அது உண்மையா?" என்று கேள்வி எழுப்பினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 9 ஜன 2018