மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

மணல் தட்டுப்பாடு : பொறியாளர்கள் போராட்டம்!

மணல் தட்டுப்பாடு : பொறியாளர்கள் போராட்டம்!

மணல் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி, திருச்சி மற்றும் தஞ்சையில் இன்று (ஜனவரி 9) காலை கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு என்னுமிடத்தில் மணல் தட்டுப்பாட்டைக் கண்டித்துக் கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மணல் தட்டுப்பாட்டைச் சீர் செய்வது, கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சுமார் 500க்கும் மேற்பட்டோரால் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தால் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுவதும் ஸ்தம்பித்தது. போராட்டக்காரர்களிடம் காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தஞ்சையிலும் மணல் தட்டுப்பாட்டை கண்டித்து, ரயில் நிலையம் அருகே போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர். வெளிமாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்லத் தடை விதிக்க வேண்டும், மணல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், மணல் விலை உயர்வால் வேலை இல்லாமல் தவிக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 9 ஜன 2018