மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

எல்லா புகழும் அம்மாவுக்கு, பணம் எல்லாம் யாருக்கு? :அப்டேட் குமாரு

எல்லா புகழும் அம்மாவுக்கு, பணம் எல்லாம் யாருக்கு? :அப்டேட் குமாரு

அரை மணி நேரமா வெயிட் பண்ணிப் பார்த்தும் ஒரு பஸ்ஸ காணோம். ஷேர் ஆட்டோ காரங்களும் வண்டியை விலைக்கு கேட்ட மாதிரி ரேட் பேசுறாங்க. தப்பி தவறி எதாவது பஸ் வருதான்னு ஏக்கத்துல நின்னுகிட்டு இருந்தேன். பக்கத்துல நிக்குறவர்ட்ட எவ்வளோ நேரமா வெயிட் பண்றீங்க சார்ன்னு கேட்டேன். அவரு ஒன்றரை மணிநேரமா நிக்குறேன் தம்பின்னார். அப்ப தான் மனசு கொஞ்சம் லேசாச்சு. போற போக்கப் பாத்தா பொங்கலுக்கு ஊருக்கு போக முடியுமா முடியாதான்னே தெரியலை. இதுல பொங்கலுக்கு லீவு எத்தனை நாள் வேணும்னு ஆபிஸ்ல கணக்கு எடுக்குறாங்க. எப்படியும் பஸ் ஓடாதுங்குற நம்பிக்கையில, ‘இந்த வருசம் எனக்கு பொங்கல் லீவு வேண்டாம் சார். எல்லா நாளும் வந்து ஒர்க் பண்ணுறேன்’னு கெத்தா எம்.டி.ட்ட சொல்லிட்டேன். போராட்டம் வாபஸ் ஆகி கூட இருக்குறவங்க எல்லாம் ஊருக்கு போய் கடுப்பேத்தீற கூடாது. இன்னொரு விஷயம் தெரியுமா நேத்து தான் ஆளுநர் தமிழ்நாடு ஜெயா ஆட்சில மாதிரி மின்மிகு மாநிலமா இருக்குன்னு சொன்னாரு. இன்னைக்கு அவர் மர்ம மரணம் பற்றி நடக்குற விசாரணையில அவர் உதவியாளர் பூங்குன்றனை கூட்டிட்டு வந்து விசாரிச்சுருக்காங்க. உள்ள போன கொஞ்ச நேரத்துல அவரு வெளியில வந்துட்டாரு. என்னய்யா வழக்கமா விசாரணைக்கு கூட்டிட்டு போறவங்களை “உங்களுக்கு இப்ப ஆறு வயசு.. என்ன பண்ணிட்டு இருந்தீங்க”ங்குற ரேஞ்சுக்கு கேட்பாங்கள்ல இவரை மட்டும் சீக்கிரம் விட்டுடாங்களே.. என்ன ஏதுன்னு கேட்டா, விசாரிக்கும் போது கரண்ட் கட் ஆயிருச்சாம். அதாம் போயிட்டு நாளைக்கு வாங்கன்னு சொல்லிட்டாங்களாம். ஆபிசர்ஸ் இது ஆளுநருக்கு தெரியாம பார்த்துக்கோங்க.

@Kayal_Twitz

ரஜினிக்காக நடுரோட்டில் நிப்பேன் - விஷால்

இந்த நேரம் பாத்தா பஸ் ஸ்ட்ரைக் பண்ணுவீங்க

@CreativeTwitz

ரஜினி சின்னத்தில் உள்ள பாபா முத்திரை எங்க நிறுவனத்துக்கு சொந்தமானது - மும்பையில் வழக்கு

மாப்பிள்ளை அவர் தான், ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை

@ivanganeshk_s

கீயர போடுன்னு

சொன்னா

புடுங்கி வெளிய போட்ருவானுங்க போல

தற்காலிக டிரைவர்ஸ்

@Akku_Twitz

ரஜினி கட்சியின் பெயரை அறிவித்த பிறகு மற்ற அரசியல்வாதிகளுக்கு தலை சுற்றும் - ராகவா லாரன்ஸ் #

நீங்க எல்லா பாட்டுலயும் ஒரேமாதிரி கால சுத்துறத நிருத்துங்க மொத

@Kozhiyaar

2021 தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அறிவித்து இருப்பது, 2021 வரை இந்த ஆட்சியை எதுவும் செய்ய முடியாது என்பதின் வெளிப்பாடோ!?

@Thaadikkaran

"சாவு பயத்தே காட்டிட்டான் பரமா" என்ற வசனம் இப்பொழுது பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு சரியாக பொருந்தும்..!!

@devil_girlpriya

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக மலேசியாவில் நடிகர் நடிகையர் கலைநிகழ்ச்சி - செய்தி

ஏன்டா, எவன கேட்டாலும் மலேசியாவுல இருந்து காசு வருது, சிங்கப்பூர்ல இருந்து காசு வருதுன்னு சொல்றிங்க, அப்ப இந்தியால இருந்த காசெல்லாம் எங்கடா போச்சு? மூமெண்ட்..

கவுண்டர் மஹான் ராக்ஸ்..

@Kozhiyaar

உங்களுக்கு கீழுள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பழகுங்கள்!!

அவர்களுக்கு அது வாழ்க்கையாகவும் இருக்கலாம்!!

@dhayai

சார் நீங்க எங்க போகனும்

திருமங்கலம்

வண்டி லைசென்ஸ் இருக்கா

ஓ கார் லைசன்ஸ் கூட இருக்கே

அப்ப சரி இந்த பஸ்ஸ நீங்களே ஓட்டிட்டு போயிருங்க நாலு பேர ஏத்திட்டு..

@கருப்பு கருணா

தமிழ்நாட்டின் நிதிநிலை சீராக இருக்காம்பா..!

யார் சொன்னது..?

அவங்களேதான் சொன்னாங்க..!

என்னான்னு..?

ம்ம்ம்..சொரைக்காயில உப்பில்லேன்னு..!

@gani2071990

சின்ன வயசுல மிஸ்ஸுக்கு பயப்படறதும்

பெரிய வயசுல மிஸ்ஸஸூக்கு பயப்படறதும் ஆண்களின்

சாபம்

@dharmaraaaj

மும்பையிலுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்--செய்தி

கிறிஸ்துமஸ ஒட்டுமொத்த டீமும் செலிபரேட் பண்ணும்போதே நினைச்சேன் நடத்திட்டாங்க

@dharmaraaaj

தானே விரும்பி வந்து தாலியை கழட்டும் திராவிட இயக்கத்தினரை மூடர் என்பர்

கட்டாயபடுத்தி தாலியை கழட்டும் நீட் தேர்வு மீறல்களை விதிமுறை என கண்டும் காணாதும் செல்லும் அதி புத்திசாலிகள்

@idumbaikarthi

மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் மனித உடலிலிருந்து இரத்தத்தை எடுக்கலாம் எனும் மருத்துவ விதிகளையெல்லாம் கொசுக்கள் ஒருபோதும் மதிப்பதில்லை!

@MSRajRules

தாலியை கழற்றிவிட்டு வந்தால் நீட் தேர்வு எழுத அனுமதி - செய்தி

நல்லவேளை திருமணம் ஆன பெண்கள் தங்கள் கணவர்களை விவாகரத்து செய்துவிட்டு வந்தால்தான் அனுமதினு சொல்லாம போயிட்டானுங்க ...,

@udhayamass1

தற்காலிக ஓட்டுனர் இயக்கும்

பேருந்தில் பயணிப்போரின்

வேண்டுதல் "இதே உடம்போட",

"இதே உயிரோட" ஊர் போய்

சேர்ந்துட்டா உனக்கு பால் காவடி

எடுக்குறேன் முருகா

@Tamil_Zhinii

குழந்தைங்களிடம்

பிரிவினையை உண்டாக்கும்

முதல் கேள்வி

அம்மா பிடிக்குமா?

அப்பா பிடிக்குமா?

@senthilcp

ஓட்டுநர் முன்னேற்ற முன்னணினு"கட்சி ஆரம்பிச்ட்டாங்க

யாரு?அரசு டிரைவர்களா?

இல்ல ,தீபா"கார் டிரைவர்

@கருப்பு கருணா

இந்த கவர்ன்மெண்ட்டு மேல முழு நம்பிக்கை இருக்காம்பா..!

யாரு சொன்னது..?

கவர்னர்தான் சொன்னாருப்பா..!

சரி..சரி...பினாமிகள் மீது நம்பிக்கை வைக்கலன்னா எப்புடி..ரைட் விடு!

@Kozhiyaar

இந்த ஆட்சியில் எல்லா புகழும் பழியும் "அம்மா"விற்கே,

பணம் மட்டும் எங்களுக்குங்கோ!!!

@Villavan Ramadoss

தாலியை கழற்றிவிட்டு வந்தால் நீட் தேர்வு எழுத அனுமதி - செய்தி

கைதியான கணவரை காணவந்த குல்பூஷன் ஜாதவ் சம்சாரதட்டோட தாலியை கழட்டி வைக்க சொன்னது பாகிஸ்தான்.

அதற்கு ஒட்டு மொத்த பாராளுமன்றமும் நாடு அவமானப்படுத்தப்பட்டதாக கதறியது.

இப்போ இதுக்கு என்ன சொல்லப்போறேள்?

நீதி : இந்திய பெண்கள் தாலியை அறுக்கவும் கழட்டி வைக்க சொல்லவும் இந்தியாவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

Boopathy Murugesh

ராமர் காலத்துல இருந்து ரோஹித் ஷர்மா வரை இந்தியா காரனுங்க பொண்டாட்டி கண் முன்ன இலங்கைகாரன தான் போட்டு அடிக்கிறானுங்க..

@வாசுகி பாஸ்கர்

இசைக்கு சாதியே கிடையாதென பாடகர் ஸ்ரீனிவாஸ் casteless collective பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, ஏற்கனவே இசைக்கு எந்த சாயமும் கிடையாது, ஆனால் பா.ரஞ்சித் இதிலுள்ள பாகுபாட்டை பற்றி தேவையில்லாமல் பேசுகிறார் என்பது போன்று திருவாய் திறந்துள்ளார்.

“உங்க ஈர வெங்காயம் எங்களுக்குத் தெரியும், அதனால தான் உலர்த்தப்பாக்குறோம்” என்று சொல்லிக்கொண்டே வேற வேலையை பார்க்கப்போனார் அந்த வழிப்போக்கன்

-லாக் ஆஃப்

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 9 ஜன 2018