மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

ஆளுநரை விமர்சிக்கக்கூடாதா?

ஆளுநரை விமர்சிக்கக்கூடாதா?

திமுக எம் எல் ஏ ஜெ.அன்பழகன் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் இன்று அவை வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் இன்று(ஜனவரி 9) நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன், ஆளுநர் ஆய்வு செய்வதற்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் மற்றும் நினைவு இல்லம் அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். எனினும் அவரது பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டப்பேரவை வாசலில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், “ எங்கள் கட்சியைச் சேர்ந்த ஜெ.அன்பழகன் பேசும்போது, பல்வேறு பிரச்னைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார். எனினும் குறுக்கீடுகள் ஏற்பட்டன. அவரது பேச்சுக்கள் சர்வாதிகாரத்தனமாக அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் ஆளுநர் குறித்து பேசக்கூடாது எனச் சபாநாயகர் கூறுகிறார். இதே அவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டி குறித்து எவ்வளவு தரக்குறைவாக பேசியுள்ளார் என்பது அவை குறிப்பில் பதிவாகியுள்ளது. அதையெல்லாம் மறந்துவிட்டு ஆளுநர் குறித்து பேசக்கூடாது என சபாநாயகர் கூறுகிறார்.

மேலும், ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவு மண்டபம் அமைக்கவும், அவரது இல்லத்தை அரசுடைமையாக்கி நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாகவும் ஆளுநர் தனது உரையில் படித்துள்ளார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரும் சசிகலா போல் சிறையில் தான் அடைக்கப்பட்டிருப்பார். உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு எப்படி அரசு நிதியில் நினைவு மண்டபம் அமைக்க முடியும் என எங்கள் உறுப்பினர் பேசினார். ஆனால் ,அவரது பேச்சு முழுவதும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை குறித்த கேள்விக்கு, “தொழிற்சங்கங்கள் தவறான தகவல்களை வாட்ஸ் அப் மூலம் பரப்புவதாக முதல்வராக இருந்து துணை முதல்வராக, அதாவது சப் இன்ஸ்பெக்ராக இருந்து ஹெட் கான்ஸ்டேபிளாக மாறியுள்ள துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்தார். இதற்கு எங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளோம்” என்று பதிலளித்தார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 9 ஜன 2018