மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

சாலையை காணவில்லை!

சாலையை காணவில்லை!

வடிவேல் ஒரு படத்தில் கிணறை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பார். மேலும் காவலர்களை அந்த இடத்துக்குக் கூட்டி சென்று "இங்கிருந்த கிணறு, 500 ஏக்கர் தென்னந்தோப்பு எல்லாத்தையும் காணோம் சார்" என்று புகார் கூறியிருப்பார். அதுபோல திருப்பூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் சாலையை காணவில்லை என்று புகார் செய்துள்ளார்.

மேலும் சாலைகளில் போடப்பட்ட வெள்ளை நிறக் கோடுகள், இரவில் ஒளிரும் பிளாஸ்டிக் ஒளிபரப்பான்கள் மற்றும் பெயர் பலகைகளைக் காணவில்லை எனவும் அதனால் காவல்துறை அவற்றினை கண்டுபிடித்து தருவதோடு திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது இந்தப் பிரச்சனை குறித்து காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியின் பல பகுதிகளில் கடந்த 2014, 2015ஆம் நிதி ஆண்டில் மாநகராட்சி சார்பில் திட்டம் தயார் செய்யப்பட்டு உலக வங்கி நிதி பெறப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு திருப்பூரில் கோல்டன் நகர், எம்எஸ்நகர் கட்டபொம்மன் நகர் ஆகிய பகுதிகளில் சாலைகள் போடப்பட்டன.

தனியார் ஒப்பந்தத்காரர்கள் மூலம் போடப்பட்ட இந்தச் சாலைகளின் மேல் வெள்ளைக் கோடுகள் வரைந்ததாகவும், அவற்றின் மீது ஒளிபரப்பான்கள் அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் அமைக்க 9 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டிருந்தன. மேலும் 85,000 ரூபாய் மதிப்பில் இந்தச் சாலைகளுக்கு பெயர் பலகை அமைத்ததாகவும் ஆவணங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்தப் பணிகள் எதுவும் செய்யாததை கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் மாநகராட்சி ஆவணங்கள் படி வடிவேல் செய்ததை போன்று அவர்கள் வழியிலேயே செல்வோம் எனப் போடப்பட்ட சாலையைக் காணவில்லை என திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால் காவல் நிலையத்தில் இந்தப் புகார் மீது வழக்குப்பதிவு ஏதும் செய்யாததை தொடர்ந்து, ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கின் மீது கடந்த வாரம் விசாரணை நடைபெற்றது. அப்போது இவரின் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

செவ்வாய் 9 ஜன 2018