மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

எச்1பி விசா: அமெரிக்கா முடிவில் மாற்றமில்லை!

எச்1பி விசா: அமெரிக்கா முடிவில் மாற்றமில்லை!

எச்1பி விசா நீட்டிப்பு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை, விசா நீட்டிப்பு வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசு எச்1பி விசாவை நீட்டிப்பதற்கு தடைவிதிக்க இருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இதனால் அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகமானது. குறிப்பாக அமெரிக்காவில் பணிபுரியும் 7,50,000 மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். அமெரிக்க தகவல் தொழில்நுட்ப துறைகளில் பணிபுரிபவர்களில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று(ஜனவரி 9) எச்1பி விசா பிரச்சனை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த செய்தி தொடர்பாளர் ஜானதன் விதிங்டன் , "எச்1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற நிர்பந்திக்கும் விதிமுறை மாற்றத்தை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை பரிசீலிக்கவில்லை. இச்சட்டத்தின் அசலான விதிப்படி எச்1பி விசா நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று குடியேற்றத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து 6 ஆண்டுகளுக்கும் கூடுதலாக எச்1பி விசா நீட்டிப்பு வழங்க முடியும்” என்று கூறினார்.

மேலும், விசா நீட்டிப்பை ரத்து செய்யும் எந்த கொள்கையையும் அமெரிக்க குடியேற்றத்துறை பரிசீலிக்காது. அழுத்தம் காரணமாக குடியேற்றத்துறை தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது என்று கூறப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது என்றும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய எச்1பி விசா கெடுபிடிகளால் இந்தியா, அமெரிக்கா இரு நாடுகளுக்குமே மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாஸ்காம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 9 ஜன 2018