நேரடி வரி வசூல் 18% உயர்வு!

நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியாவின் நேரடி வரி வருவாய் 18.2 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017 ஏப்ரல் - டிசம்பர் மாதங்களில் 18.2 சதவிகித உயர்வுடன் ரூ.6.56 லட்சம் கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகர நேரடி வரி வசூலானது 2017-18 நிதியாண்டின் நேரடி வரிகளுக்கான பட்ஜெட் மதிப்பீடான ரூ.9.8 லட்சம் கோடியில் 67 சதவிகிதமாகும். மேலும், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களுக்கான ரீபண்ட் தொகைக்கு முந்தைய மொத்த வரி வசூல் 12.6 சதவிகித உயர்வுடன் ரூ.7.68 லட்சம் கோடியாக உள்ளது.