சாம்சங் நிறுவனத்தின் பிரம்மாண்டம்!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் CES நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் 146 இஞ்ச் திரையளவு கொண்ட பிரம்மாண்டமான தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது.
மிகப் பெரிய அளவிளான திரையளவு கொண்டுள்ள இந்த மாடல் மைக்ரோLED என்ற புதிய வசதியை இணைத்து அறிமுகம் செய்துள்ளது. முதலில் சாதாரணத் திரையில் இருந்து LED திரையாக மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர் சமீபத்தில் OLED திரை அறிமுகம் செய்யப்பட்டுப் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதன் தொடர்ச்சியாகத் தற்போது மைக்ரோ LED என்ற புதிய தொழில்நுட்பத்தை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மிகவும் துல்லியமான தகவல்களைக் கண்டறியவும் இந்தத் திரை பயன்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.