மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

உதயநிதிக்குக் கைகொடுக்குமா ‘நிமிர்’?

உதயநிதிக்குக் கைகொடுக்குமா ‘நிமிர்’?

ப்ரியதர்ஷன் - உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் உருவாகியிருக்கும் நிமிர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படம் தமிழில் ‘நிமிர்’ என்ற பெயரில் ரீமேக்காகி இருக்கிறது. உதயநிதிக்கு ஜோடியாக நமீதா பிரமோத், பார்வதி நாயர் ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மலையாளத்தில் நடித்த அபர்ணா கேரக்டரில் நமீதா பிரமோத்தும், அனுஸ்ரீ கேரக்டரில் பார்வதி நாயரும் தமிழில் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் ப்ரியதர்ஷன், ‘நடிப்பில் பகத் ஃபாசிலை மிஞ்சியிருக்கிறார் உதயநிதி’ எனத் தெரிவித்திருந்தார். ஆனால், வெளியாகியிருக்கும் ட்ரெய்லரில் உதயநிதியின் நடிப்பு, பகத் ஃபாசிலின் யதார்த்தமான நடிப்பைப் பிரதிபலிக்கவில்லை. அதோடு மகேஷிண்டே பிரதிகாரம் படத்தோடு ஒப்பிடும்போது இந்தப் படத்தின் புனைவு அப்பட்டமாக தெரிகிறது. தமிழ் சினிமாவுக்கேற்ப மசாலா காட்சிகளைப் படத்தில் சேர்த்திருப்பதும் ட்ரெய்லரில் தெரிகிறது.

மலையாளத்தில் சண்டைக்காட்சிக்கு ஒரு ஆட்டோதான் பயன்படுத்தியிருப்பர். ஆனால், இதில் பல ஆட்டோக்கள் பயன்படுத்தியுள்ளனர். சண்டையின்போது மழையைப் பயன்படுத்தும் தமிழ் சினிமா யுக்தியும் இதில் கையாளப்பட்டிருக்கிறது. உதயநிதியின் அப்பாவாக நடித்திருக்கும் இயக்குநர் மகேந்திரனின் கதாபாத்திரம், நண்பனாக நடித்திருக்கும் கருணாகரன் மற்றும் காதலியின் அண்ணனாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏனைய கதாபாத்திரங்களிலும் யதார்த்தம் தென்படவில்லை.

இருப்பினும் குடியரசு தினக் கொண்டாட்டமாக ஜனவரி 26ஆம் தேதி வெளிவரவுள்ள ‘நிமிர்’ ரசிகர்களைக் கவருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

நிமிர் ட்ரெய்லர்

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 9 ஜன 2018